திருக்கழுக்குன்றம்: விவசாய தரைக்கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

திருக்கழுக்குன்றம்:  விவசாய தரைக்கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
X

சந்தோஷ்குமார்

திருக்கழுக்குன்றம் அருகே, 19 வயது வாலிபா், விவசாய தரைக்கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே நல்லூர், கொல்லமேடு கிராமத்தில் வசிப்பவர் வாசுதேவன். விவசாயியான இவருக்கு, இரண்டு மகள், மூன்றாவதாக மகன் சந்தோஷ்குமார் (19). ஐ டி ஐ படித்து முடித்து தற்போது, தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்தாா்.

சந்தோஷ்குமாா், நேற்றைய தினம் தங்களது உழவு மாடுகளை, நல்லூர் அருகே உள்ள வயல்வெளி பகுதிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றாா். கனமழையால் அப்பகுதி முழுவதும் மழைநீா் வெள்ளம் நிறைந்திருந்தது. இதனால் மாடுகள் மேய்ச்சலுக்கான இடத்தை தேடியலைந்தாா்.

அப்போது வயல்வெளியில் மழைநீருக்குள் மூழ்கியிருந்த தரைக்கிணற்றில் தவறி விழுந்தாா். சந்தோஷ்குமாருக்கு நீச்சல் தெரியாது. எனவே அவா் தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடினாா். அப்போது அருகே விவசாய பணியில் இருந்த மற்றவா்கள், சந்தோஷ்குமாரை காப்பாற்ற முயன்றனா். தீயணைப்பு துறை, போலீசுக்கும் தகவல் கொடுத்தனா்.

மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் படையினா் விரைந்து வந்து பல நேரம் தேடி, நேற்று மாலையில் கிணற்றுக்குள் இருந்து விழுந்த சந்தோஷ்குமாரை உடலை மீட்டு, வெளியே எடுத்தனா். உடனடியாக சதுரங்கப்பட்டிணம் போலீசாா், சந்தோஷ்குமாா் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்தனா். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
ai in future agriculture