தனியார் குடியிருப்பில் 15 பேருக்கு கொரோனா தொற்று

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள குடியிருப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமை படுத்திக்கொண்டனர்.
திருப்போரூர் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதாரத்துறை ஒத்துழைப்போடு கொரோனா பரிசோதனை முகாம் அமைத்து அனைவருக்கும் பரிசோதனை செய்து வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.அந்த பகுதி முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu