செங்கல்பட்டு: அனுபுரம் பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
நெய்குப்பி ஊராட்சி அனுபுரம் பகுதியில் நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய நெய்குப்பி ஊராட்சி அனுபுரம் அனு ஆற்றல் நகரிய நுழைவு வாயில் சாலை இருபுறமும் சிறு சிறு கடைகளாக காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை அப்பகுதி விவசாயிகள் விற்பனை செய்து வரும் நிலையில் நாளடைவில் கடைகள் அதிகமானதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்,
இதனால் பொதுமக்கள், நகரிய மக்களின் நலன் கருதி கல்பாக்கம் இந்திராகாந்தி அனு ஆராய்ச்சி மையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது அதில் நகரிய மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், நகரிய நுழைவு வாயிலில் இரு புறமும் உள்ள கடைகளை அகற்ற கோரியும் கடிதம் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரனுக்கு உத்தரவு கடிதம் அனுப்பினார்,
அதில் பொது மக்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நிறைவேற்ற கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நெய்குப்பி ஊராட்சி மன்ற தலைவருக்கு கடிதம் அனுப்பினார். அதன்படி ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் ஆகியோர் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டிஸ் அளித்தனர். அதனை தொடர்ந்து நேற்றைய தினம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார் சிவசங்கரன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன், துணை தலைவர் என் என் கதிரவன் கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட வருவாய் துறையினர் மூலம் வியாபாரிகளை அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் பங்கேற்ற வியாபாரிகள் கூறுகையில், எங்களுக்கு வியாபாரம் செய்ய மாற்று இடம் வேண்டும் என்றும் எங்களின் வாழ்வாதாரம் இந்த கடைகளை நம்பிதான் இருக்கிறோம் என தெரிவித்தனர். மாற்று இடம் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து வியாபாரிகளுக்கு மாற்று இடத்தை குலுக்கல் முறையில் சீட்டு எடுத்து நகரிய சுற்றுசுவர் ஓரத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் அப்பகுதி கவின்சிலர் மூலம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu