இருளர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கிய செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர்

இருளர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கிய செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர்
X

செங்கல்பட்டு அருகே இருளர் மக்களுக்கு ஜாதி சான்றிதழினை வழங்கிய வருவாய் கோட்டாட்சியர் சாகிதா பர்வீன்

செங்கல்பட்டு அருகே இருளர் மக்களுக்கு ஜாதி சான்றிதழினை வருவாய் கோட்டாட்சியர் சாகிதா பர்வீன் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய நடுவக்கரை ஊராட்சி இந்திரா நகர் இருளர் பகுதியை சேர்ந்த 48 நபர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருக்கழுக்குன்றம் தாசில்தார் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பாளராக மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சாகிதா பர்வீன் கலந்துகொண்டு ஜாதி சான்றிதழினை வழங்கினார்.

மேலும் அப்பகுதி மக்கள் கோட்டாட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா, விடுபட்ட நபர்களுக்கு ஜாதி சான்றிதழ், மின் இணைப்பு மற்றும் விதவை, முதியோர் உதவி தொகை வழங்க கோரி மனுக்களை அளித்தனர்,

நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திக்ரகுநாத், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நிர்மலா, கிராம நிர்வாக அலுவலர் அமித் பாஷா, கிராம செயலாளர் ஜோதிபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story