செங்கல்பட்டு: விபத்தில் வாலிபர் காயம்; காரை ஆம்புலன்சாக மாற்றிய திருப்போரூர் எம்எல்ஏ!

செங்கல்பட்டு: விபத்தில் வாலிபர் காயம்; காரை ஆம்புலன்சாக மாற்றிய திருப்போரூர் எம்எல்ஏ!
X

விபத்துக்குள்ளான வாலிபரை, தனது காரில் ஏற்றுகிறார் திருப்போரூர் எம்எல்ஏ. பாலாஜி.

விபத்தில் சிக்கிய வாலிபரை தனது வாகனத்தையே சிறிது நேரம் ஆம்புலன்சாக மாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து திருப்போரூர் எ.எல்.ஏ.மனிதாபிமானத்தை காண்பித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்களம் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு வாலிபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்து நீண்ட நேரமாகியும் அவசர ஊர்தி வரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி இன்று திருக்கழுக்குன்றம் பகுதியில் நடைபெற்ற இரண்டாவது தவனையாக ரூ,2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் திருப்போரூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு விபத்தில் அடிப்பட்டு போராடிய வாலிவரை மீட்டு, உடனடியாக தனது வாகனத்தில் ஏற்றி திருக்கழுக்குன்றம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

விபத்தில் சிக்கிய வாலிபரை தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த எ.எல்.ஏவை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!