செங்கல்பட்டு பெருராம ஆஞ்சநேயர் கோயில் 7ம் ஆண்டு விழா

செங்கல்பட்டு பெருராம ஆஞ்சநேயர் கோயில் 7ம் ஆண்டு விழா
X

ஸ்ரீ பெருராம ஆஞ்சநேயர் கோயில்.

பெருந்தண்டலம் பெருராம ஆஞ்சநேயர் கோயில் 7ம் ஆண்டு விழா சிறப்பு வழிபாடுகள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி இன்று நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருவடிசூலம் அடுத்த பெருந்தண்டலம் மலைமீது 27 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பெருராம ஆஞ்சநேயர் கோயில். இத்தலத்தில், 7 ஆம் ஆண்டு விழாவையொட்டி காலை பால ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து 27 அடி உயரமுள்ள ஸ்ரீ பெருராம ஆஞ்சநேயருக்கு முத்தங்கி, கிகித ஜபமாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வடை, துளசி, வெற்றிலை, பழம், பூ ஆகியவற்றால் மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாரதனை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. இதில் கொரோனா காரணமாக பொதுமக்கள் அனுமதியின்றி எளிமையான முறையில் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ஆனந்தவேலு செய்திருந்தார்.

Tags

Next Story
ai solutions for small business