திருக்கழுக்குன்றத்தில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடை வழங்கும் விழா

திருக்கழுக்குன்றத்தில்  கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடை வழங்கும் விழா
X

அர்ச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா.

திருக்கழுக்குன்றத்தில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத் துறை சார்பில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறை சார்பில் திருக்கோயில் அர்ச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இதில் திருப்போர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கலந்து கொண்டு அர்ச்சகர்களுக்கும், பணியாளர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் சீருடைகளை வழங்கி பின்னர் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

இவ்விழாவில் செயல் அலுவலர் குமரன், மேலாளர் விஜயன்.ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன், திமுக மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார், திருப்போர் தொகுதி விசிக செயலாளர் ஆநா. பெருமாள், திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!