கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த கார், தீ பிடித்து எரிந்து சேதம்

கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த கார், தீ பிடித்து எரிந்து சேதம்
X
விபத்துக்குள்ளான கார் தீ பிடித்து எரியும் காட்சி
பழைய மாமல்லபுரம் சாலையில் அதிவேகமாக வந்த கார் வீட்டுக்குள் புகுந்தது விபத்துக்குள்ளானது, கார் தீ பிடித்து எரிந்து சேதமடைந்தது.

சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் (ராமச்சந்திரா மருத்துவமனை) ஊழியராக(கிளர்க்) வேலை செய்து வருபவர் நாராயணன்(57), இவர் ஒரு வேலை விஷயமாக பழைய மாமல்லபுரம் சாலை வழியாக சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி மாருதி சுசூகி பெட்ரோல் காரில் வந்து கொண்டிருந்தார்.

காரை தானே ஓட்டி வந்துள்ளார். காரில் இவருடன் வேறு யாரும் பயணம் செய்யவில்லை. கார் மாமல்லபுரம் அருகே கூத்தவாக்கம் என்ற இடத்தில் வரும்போது திடீரென கார் தனது கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி வலது பக்கத்தில் உள்ள ரிச்சர்டு என்பரின் வீட்டு வளாகத்தினுள் புகுந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. அப்போது பெட்ரோல் கசிவு ஏற்பட்டு கார் திடீரென மளமளவென எரிய ஆரம்பித்தது.

அதற்குள் அந்த வீட்டில் உள்ளவர்கள் காரினுல் சிக்கி தவித்த நாராயணனை காப்பாற்றினர். பிறகு அந்த வீட்டு உரிமையாளர்கள் மாமல்லபுரம் காவல் துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறை ஊழியர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். ஆனால் காரின் என்ஜின், டயர், ஏசி எந்திரம் உள்ளிட்ட அனைத்து உதிரி பாகங்களும் முற்றிலும் எரிந்து நாசமானது.

பிறகு தலையில் சிறிய காயத்துடன் உயிர்தப்பி காயமடைந்த நாரயணனை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசுபொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கார் தீ விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!