வல்லிபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் டிஐஜி சத்திய பிரியா மரக்கன்றுகளை நட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் சரக காவல்துறை துணை தலைவர் சத்திய பிரியா கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பின்னர் மாணவ மாணவியரிடையே உரையாற்றினார். அப்போது கூறியதாவது :
நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் பற்றியும், மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்சனைகளை எந்த தயக்கமும் இன்றி ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் மற்றும் காவல் துறையிடமும் எந்தவொரு அச்சமுமின்றி தயங்காமல் தெரிவிக்கவேண்டும்.
காவல்துறை எப்போது உங்களுக்கு ஆதரவாக செயல்படும் என்று உறுதிகூறினார். இதில் மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதீஸ்வரன், திருக்கழுகுன்றம் காவல் ஆய்வாளர் ரவிகுமார், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சத்திய பாமா, தனிபிரிவு உதவி ஆய்வாளர் அரிவழகன், உஷாராணி மற்றும் உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிகுமார், பொருளாளர் சக்கரவர்த்தி, மேலாண்மை குழு தலைவர் பார்த்தசாரதி, ஊராட்சி மன்ற தலைவர் சோபியா பார்த்தசாரதி, துணை தலைவர் அம்பிகா மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu