/* */

அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
X

அகில இந்திய இறால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இப்பொதுக்குழு கூட்டத்திற்கு அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் ஸ்கால்ராஜ் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் எலஞ்சி ரவி கலந்து கொண்டு பேசினார். குறிப்பாக இப்பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள இறால் பண்ணைகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய், 6.50(ஆறுரூபாய் ஐம்பது காசு) காசு வசூலிக்கப்பட்டு வந்ததை தமிழக அரசு ரூ.8.50(எட்டு ரூபாய் ஐம்பது காசு) கட்டணமாக உயர்த்தி அறிவித்தது.

இதையடுத்து உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைத்து பழைய கட்டணத்தையே (6.50) வசூலிக்க வேண்டும் என்று இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்கத்தினர் தமிழ்நாடு மின்வாரிய குறைதீர் மன்றத்தில் முறையிட்டனர். இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினிடமும் கோரிக்கை வைத்தனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மின்வாரிய நிர்வாகத்திற்கு உயர்த்தப்பட்ட(8.50) கட்டண திட்டத்தை ரத்து செய்து பழைய கட்டணத்தையே(6.50) வசூலிக்க உத்தரவிட்டது. இதையடுத்து மாமல்லபுரத்தில் நடந்த இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்கத்தின் அகில இந்திய பொதுக்குழு கூட்டத்தில் மின் கட்டண குறைப்புக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து இறால் குஞ்சு உற்பத்தியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அகில இந்திய அளவில் சிறந்த இறால் பண்ணை நிர்வகிக்கும் உற்பத்தியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On: 16 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...