திருப்போரூர் அருகே கார் சாலை தடுப்பில் மோதி விபத்து

திருப்போரூர் அருகே கார் சாலை தடுப்பில் மோதி விபத்து
X

திருப்போரூர் அருகே கார் சாலை தடுப்பில் மோதி விபத்து 

பாண்டிச்சேரிக்கு சென்று வந்த கார், திருப்போரூர் அருகே சாலை தடுப்பில் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி 4 பேருடன் சென்று கொண்டிருந்த கார், இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அதனால் காரின் முன்பகுதி முழுவதும் உடைந்து கார் ஓட்டுனர் உள்பட காரில் பயணம் செய்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பலத்த காயமடந்த நான்கு பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாண்டிச்சேரியில் நேற்று முதல் மதுபான கடைகளை திறந்துள்ளதால் நான்கு பேரும் மதுகுடிக்கச் சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பும்போது விபத்து ஏற்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!