திருக்கழுக்குன்றம் அருகே சிமென்ட் லாரி மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

திருக்கழுக்குன்றம் அருகே சிமென்ட் லாரி மோதியதில் இளைஞர் உயிரிழப்பு
X

விபத்தில் பலியான இளைஞர் 

திருக்கழுக்குன்றம் அருகே இருசக்கர வாகனம் மீது சிமென்ட் லாரி மோதியதில் இளைஞர் உடல் நசுங்கி உயிரிழந்தார்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரபாக்கத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் தினகரன், வயது 25, இவர் பெயின்டராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று அவரது உறவினர் திருமண விழாவிற்கு சென்று விட்டு தாம்பரத்திலிருந்து, கருமாரபாக்கத்திற்கு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருக்கழுக்குன்றம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியை கடந்தபோது, எதிரில் வந்த சிமென்ட் லாரி மோதியதில், சம்பவம் இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்,

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் இளைஞரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!