திருக்கழுக்குன்றம் அருகே விபத்து; 2 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திருக்கழுக்குன்றம் அருகே விபத்து; 2 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான வேனை கிரேன் உதவியுடன் மீட்கப்படுகிறது.

திருக்கழுக்குன்றம் அருகே பைக்குகள் மீது வேன் மாேதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரத்தில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக சென்றிருந்தனர். பின்னர், அங்கிருந்து தங்களது உறவினர்களுடன் ஒரு வேனில் மீண்டும் சோழிங்கநல்லூருக்கு நள்ளிரவில் திரும்பினர்.

அப்போது, திருக்கழுக்குன்றம் அடுத்த கருங்குழி சாலையில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வேன் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. எதிரில் வந்த 5 பைக்குகள் மீது வேன் மோதியதில் பைக்குகளில் வந்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்திலேயே இருவர் உடல் நசுங்கி பலியாகினர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார், காயமடைந்த 10 க்கும் மேற்பட்டவர்களை சிகிச்சைக்காக ஆம்புலென்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!