சென்னை நாவலூரில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது

சென்னை நாவலூரில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த  4 பேர் கைது
X

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நால்வர்.

Ganja in Tamil - சென்னை நாவலூரில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Ganja in Tamil -தாம்பரம் காவல் ஆணையரகம், தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய மகாபலிபுரசாலை நாவலூர், இந்திரா நகர், காந்தி தெருவில் ஒரு வீட்டில் வசித்து வரும் திரிபுராவை சேர்ந்த சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தாழம்பூர் காவல் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் தாழம்பூர் போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டதில் 8 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அங்கிருந்த நான்கு பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் நான்கு பேரும் திரிபுராவை சேர்ந்த தஹர் மியா(32), இசாத் மியா(46), அமீர் ஹோசன்(31), பஹர் மியா(25), என்பதும் திரிபுராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து, ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்க்கும் வடமாநில நபர்களிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த தாழம்பூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்