படூர் இந்துஸ்த்தான் பல்கலைக்கழகத்தின் 21வது தின விழா, கலெக்டர் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த படூர் இந்துஸ்த்தான் பல்கலைக்கழகத்தில் , 21ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் தின விழா நடைபெற்றது.
இதில், பல்கலைக்கழக வேந்தர் எலிசபெத் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு அனைவரும் முகக்கவசம் அணிவந்து வந்தனர். முழுமையாக கொரோனா விதி முறைகளை கடைப் பிடிக்கப்பட்டு பல்கலைக்கழக தினவிழா நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கவுரவ விருந்தினராக, சென்னை பிளக்ஸ்ட்ரோனிக்ஸ் துணை தலைவர் சேகரன் லட்சுமணன் மற்றும் துணை வேந்தர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விருதுகள், மற்றும் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினார். 25 ஆண்டுகள் பணியாற்றிய பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இறுதியாக மாவட்ட ஆட்சியர் உரையாற்றியபோது.கொரோனா நோய் தாக்கத்தால் பல்வேறு இழப்புகளை இழந்துள்ளோம், அதியும் தாண்டி சந்தோஷமான இந்த நாள் நம் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக இருக்க வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்லூரிகளில் எந்த நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை.
தற்போது இந்த நிகழ்ச்சி நடப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனக்கு கல்லூரியில் படித்த நினைவுகள் வருகிறது. குடிமைப்பணிக்கு தயாராகும் போது, உயர் லட்சியத்திற்கு செல்ல கற்றுக் கொடுத்து சிந்திக்கத் தூண்டும்.கல்வி திறமை இருந்தால் மட்டும் போதுமானதல்ல, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் சிறந்தவர்களாக தங்களை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
கல்வி, விளையாட்டு போன்ற அனைத்தையும் ஊக்கப்படுத்த கல்லூரி துணையாக உள்ளது. மாணவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,தொழில், உணர்வு, சமூகம் சார்ந்த மூன்று வகையான வெற்றி இருக்க வேண்டும். என்று மாவட்ட ஆட்சியர் சிறப்புரையாற்றினார். கல்லூரி நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu