முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மணல் சிற்பம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் அருகே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் அருகே இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 30 அடி உயரமும் 160 அடி நீளமும் கொண்ட இந்த மணல் சிற்பத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் 1000 டன் மணல் கொண்டு மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக தற்போது திறந்து வைக்கப்பட்டு உள்ளது .
கடந்த 20 நாள்களில் 50 மணல் சிற்பக் கலைஞர்களால் 1000 டன் மணலைக் கொண்டு இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே உள்ள மானிக்குப்பம் என்ற ஒரு சிறிய கிராமத்து சிற்பி மற்றும் அவரது குழுவினரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த மணல் சிற்பம் ஒரு வாரம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளது. பிரமாண்ட சிற்பம் அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதா, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மணல் சிற்பமும் இடம்பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu