சாமந்தி பூ பயிரிட்டு அசத்தும் பெண் விவசாயி

சாமந்தி பூ பயிரிட்டு அசத்தும் பெண் விவசாயி
X

செங்கல்பட்டு அருகே இந்த ஆண்டு போதிய மழை பெய்த நிலையில் சாமந்தி பூ பயிர் செய்து பெண் விவசாயி அசத்தி வருகிறார்.

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக மழையின்மை காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு சிலர் வேலை தேடி சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று விட்டனர். ஆனால் இந்த ஆண்டு தேவைக்கேற்ப மழை பெய்துள்ளதால் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்துக்கு உட்பட்ட திருநிலை கிராமத்தில் வசித்து வரும் குப்பம்மாள் என்ற பெண் மாற்று பயிராக சாமந்தி பூ விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டி வருகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- கடந்த 4 ஆண்டுகளாக மழையின்மை காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மண்ணின் தன்மையும் மாறி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த வருடம் நல்ல மழை பெய்தது. இயற்கை விவசாய ஆலோசகர்களின் ஆலோசனையின் பேரில் குறைந்த நீரை உபயோகித்து அதிக லாபம் பெற நெற்பயிருக்கு பதிலாக சாமந்திப்பூ பயிரிட்டதாகவும் சாமந்தி நாற்று நட்டு 45 நாட்களில் பூ பறிக்க ஆரம்பித்து தற்போது அதிக மகசூல் கிடைப்பதாகவும், ஒரு கிலோவிற்கு ரூ50 வரை லாபம் கிடைப்பதாகவும் மற்ற பயிர்களை விட சாமந்திபூ விவசாயம் சுலபமாக இருப்பதாகவும், மற்ற விவசாயிகளும் இதுபோன்ற விவசாயத்தை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!