தாம்பரம் அருகே கண்ணாடி துண்டுகள் மீது 90 நிமிடம் நடனமாடி இளைஞர் உலக சாதனை
உடைந்த கண்ணாடி துண்டுகள் மீது தொடர்ந்து 90 நிமிடம் நடனம் அடி உலக சாதனை செய்த சரண்ராஜ்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் உள்ள தனியர் கல்லூரியில் லிங்கன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கும்பகோணத்த சேர்ந்த சரண்ராஜ் என்ற இளைஞர் உடைந்த கண்ணாடி துண்டுகள் மீது தொடர்ந்து 90 நிமிடம் நடனம் அடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். அதேபோல் ஏஞ்சிலா ஷெரின் என்ற இளம்பெண் 10 அடி உயரமுள்ள மரக்காலில் 15 நிமிடம் தொடர்ந்து நடனம் ஆடினார்.
அதன்படி இருவரையும் சாதனையும் அங்கிகரித்து லிங்கன் புக் ஆப் ரிக்கார்ஸ் சார்பில் உலக சாதனையாக அங்கீகரித்து, லிங்கன் புக் ஆப் ரிக்கார்ஸ் நிறுவனர் ஜோசப் இளந்தென்றல் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கி பாராட்டினர். உலகசாதனை நிகழ்ச்சியில் லிங்கன் புக் ஆப் ரிக்கர்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கார்த்தி, ஒருங்கிணைப்பாளர் உமா ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu