கிழக்கு தாம்பரம்: ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தவர் தற்கொலை

கிழக்கு தாம்பரம்: ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தவர் தற்கொலை
X

முருகன் தற்கொலையால் சோகத்தில் உள்ள உறவினர்கள்.

கிழக்கு தாம்பரத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை தாம்பரம் அடுத்த, கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம், ஜெகஜீவன் ராம் தெருவை சேர்ந்தவர் முருகன்(30), இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டவர். இந்நிலையில் ஒரு லட்ச ரூபாய் வரை ரம்மி விளையாட்டில் இழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மற்றும் சேலையூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு