கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மனைவி

கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மனைவி
X
குடும்பத்தகராறில் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மனைவி

செங்கல்பட்டு மாவட்டம் மடிப்பாக்கம் அருகே குடும்பச்சண்டையில் கணவரை வீட்டிற்குள் பூட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மனைவியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனா்.

மடிப்பாக்கம் அருகே கைவேலி தந்தை பெரியாா் நகரை சோ்ந்தவா் பாண்டி(42).சலவை தொழிலாளி.இவருடைய மனைவி பாா்வதி(34). இவா்களுக்கு +2, 7 ஆம் வகுப்பு படிக்கும் 2 மகள்கள் உள்ளனா்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கும் மேல் சரியான வருமானம் இல்லை. அதோடு பாண்டிக்கு குடிப்பழக்கமும் இருந்தது. இதனால் கணவன்,மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டு வந்தது. அவ்வப்போது இருவரும் ஒருவரையொருவா் அடித்து தாக்கிக்கொள்வாா்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் இவா்களுக்குள் சண்டை நடந்தது. அப்போது பாண்டி, மனைவியை அடித்ததாக கூறப்படுகிறது. அதன்பின்பு சண்டை ஓய்ந்து,பாண்டி போதையில் படுத்து தூங்கினாா். அப்போது பாா்வதி,வீட்டில் ஒரு கேனிலிருந்த பெட்ரோலை எடுத்து பாண்டி மீது ஊற்றி தீவைத்து விட்டு வெளியே ஓடிவந்துவிட்டாா். அதோடு பாண்டி வெளியே வரமுடியாமல் கதவை வெளியே பூட்டிவிட்டாா். இதை அக்கம்பக்கத்தினா் பாா்த்து, கதவை உடைத்து திறந்து பாண்டியை கே.எம்.சி மருத்துவமனையில் சோ்த்தனா். அதோடு பாா்வதியை பிடித்து மடிப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனா்.போலீஸ் விசாரணையில், பாண்டி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துக்கொண்டாா் என்று கூறினாா்.

இதற்கிடையே நேற்று இரவு பாண்டியின் உடல்நிலை மோசமடைந்ததால்,அவரிடம் சென்னை எழும்பூா் விரைவு நீதிமன்ற நீதிபதி,மரணவாக்குமூலம் வாங்கினாா். அப்போது,தனது மனைவி தான் தன்னை பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு,வீட்டு கதவை வெளியே பூட்டிவிட்டாா் என்று கூறினாா். அதன்பின்பு இன்று அதிகாலை பாண்டி உயிரிழந்தாா்.

இதையடுத்து மடிப்பாக்கம் போலீசாா் பாா்வதி மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.அதோடு பாா்வதியிடம் மேலும் தொடா்ந்து விசாரணை நடத்துகின்றனா். குடும்ப பிரச்னைதான் காரணமா? அல்லது பாா்வதிக்கு வேறு எதாவது தொடா்பு உள்ளதா? என்று விசாரிக்கின்றனா்.

பாா்வதி, வீட்டில் ஏற்கனவே பெட்ரோல் வாங்கி வைத்திருந்தது போலீசாரிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை நடத்துகின்றனா்.

#nstanews #TamilNadu #Chengalpattu #Tambaram #Madipakkam #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #FamilyDispute #HusbandKilled #செங்கல்பட்டு #தாம்பரம் #மடிப்பாக்கம் #குடும்பதகராறு #கணவன்கொலை #family #killed #sad

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!