வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா: தலைமை வன பாதுகாப்பு அதிகாரி ஆய்வு!

வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா: தலைமை வன பாதுகாப்பு அதிகாரி ஆய்வு!
X

சிங்கத்துக்கு கொரோனா  பரிசோதனை செய்த காட்சி.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமை வன பாதுகாப்பு அதிகாரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 5 சிங்கங்களுக்கு கடந்த 26-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது. பசியின்மை ஏற்பட்டதுடன், சில நேரங்களில் இருமல் பாதிப்பும் இருந்தது. பூங்காவில் உள்ள மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 11 சிங்கங்களின் ரத்த மாதிரிகள் கால்நடை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

சளி மற்றும் குடல் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய்களுக்கான தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்தது. பரிசோதனை முடிவுகளை உறுதிப்படுத்தவும், இணை நோயால் பெண் சிங்கம் உயிரிழந்ததா என்பதை அறியவும், இந்த மாதிரிகள், பரேலி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள ஆய்வகங்களுக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான சிங்கங்களுக்கு உரிய விதிமுறைகளின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், பணியாளர்களுக்கு கவசஉடை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று தலைமை வன பாதுகாப்பு அதிகாரி யுவராஜி தலைமையில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேசிய அவர், கொரொனா பாதித்த 9 சிங்கங்களில் இரண்டு சிங்கங்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சிங்கங்களை காப்பாற்றும் முயற்ச்சியில் வன விலங்கு பாதுகாப்பு மருத்துவர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மற்ற விலங்குகள் எந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளன, என்பது குறித்தும் விலங்குகளுக்கு பாதுகாப்பு ஊழியர்களுக்கும், உணவளித்த வன ஊழியர்களுக்கும் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது என்றார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்