தாம்பரம் அருகே சட்டவிரோத ஒரு நெம்பர் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது

தாம்பரம் அருகே சட்டவிரோத ஒரு நெம்பர் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது
X
ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்றதாக கைதான இருவர்.
சென்னை தாம்பரம் அருகே சட்டவிரோத ஒரு நெம்பர் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தாம்பரம் அடுத்த பூண்டி பஜார், மற்றும் கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெருவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா ஒரு நெம்பர் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக சேலையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு நெம்பர் லாட்டரி எழுதிக் கொண்டிருந்த கோடம்பாக்கத்தை சேர்ந்த சந்திரன்(30), கும்பகோணத்தை சேர்ந்த ஆனந்தராஜ்(24), ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து துண்டு சீட்டுகள், 2650 ரூபாய் பணம் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!