ஒருவரை வெட்டி விட்டு வாகனத்தில் தப்பியோடிய வழக்கில் இருவர் கைது
இளைஞர்கள் ஆயுதத்துடன் வாகனத்தில் சென்ற சம்பவம் சிசிடிவியில் பதிவான காட்சி
பட்டாக் கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்து இளைஞர்கள், ஒருவரை வெட்டி விட்டு தப்பியோடிய வழக்கில் இரு நபர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம் முத்தாலம்மன் கோவில் தெரு அருகே மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களில் பட்டாக் கத்தியுடன் வலம் வந்துள்ளனர். இரவில் ஒருவரது புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு அந்த நபர் குறித்து அனைவரிடமும் கேட்டு வந்தனர்.இந்நிலையில் அங்கிருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞரிடம் படத்தை காட்டி கேட்ட போது யார் என தெரியாது என கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த, பட்டாக்கத்தியுடன் வந்த மர்ம கும்பல் அவரை பட்டாக் கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதனை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது தொடர்பாக சிகிச்சைக்கு பிறகு கிருஷ்ணமூர்த்தி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சம்பவத்தில் தொடர்புடைய இரும்புலியூரை சேர்ந்த விக்னேஷ்(எ)அப்பு(22), முடிச்சூரை சேர்ந்த ராஜ்மோகன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.
விசாரணையில் கடந்த வாரம் அப்பு என்கிற விக்னேஷ் ஆதி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மற்றொரு இருசக்கர. வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அப்புவை அந்த நபர் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை யார் என கண்டு பிடித்து அடிக்க வேண்டும் என சொன்னதாகவும், அவர் யார் என தெரியாததால் சமூக வலைதளங்களில் இருந்த ஒரு படத்தை எடுத்துக் கொண்டு அந்த பகுதியில் தேடிச் சென்றதாகவும் அப்போது எங்களை அங்குள்ள நபர் கிண்டல் செய்ததால் கத்தியால் தாக்கியதாக வாக்குமூலம் அளித்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu