இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரேலா மருத்துவமனையில் பாராட்டு
செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை சார்பில் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக குழு இயக்குனர் பேராசிரியர் முகமது ரேலா
இணையம் வழியாக நடைபெறும் (எர்த்திங் மாஸ்டர்ஸ்) எனும் ரேபிட் முறையிலான செஸ் தொடரின் 8-வது சுற்றில் பிரக்ஞானந்தாவும் கார்சல்னும் கடந்த 21-ம் தேதி மோதினார்கள். ரேபிட் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆடப்படும் போட்டியாகும். இந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் செஸ் கிராண்ட் மாஸ்டர் கார்சலனை இந்திய நம்பர் ஒன் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
அதனை கவுரவிக்கும் வகையில், செங்கல்பட்டுமாவட்டம், தாம்பரம்அடுத்த குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை சார்பில் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக குழு இயக்குனர் பேராசிரியர் முகமது ரேலா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு இந்திய நம்பர் ஒன் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை, பூங்கொத்து கொடுத்து அற்புதமான சாதனைக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய நம்பர் ஒன் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா செய்தியாளர்களிடம் பேசுகையில்:நான் கடந்த ஐந்து வயது முதல் எனது செஸ் விளையாட்டை ஆரம்பித்தேன். எனது விளையாட்டு பத்து வயதில் நேஷனல் ப்ளேயரில் தகுதி பெற்றேன் பின்னர் 12 வயது 14 வயது என தொடர்ந்து எனது விளையாட்டை வெற்றி கண்டு உள்ளேன். தற்போது 16 வயதில் வேர்ல்டு நம்பர் ஒன் கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியைப் பெற்று உள்ளேன். எனது விளையாட்டு சாதாரண முறையில் தான் விளையாடினேன் என்றும் கூறினார். தொடர்ந்து தகுதி சேர்ந்தவர்களிடம் விளையாடும் போது தான் தனது திறமையை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வாய்ப்பாக அமையும். மீண்டும் இதுபோன்று உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu