அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் பிபின்ராவத் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி

அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் பிபின்ராவத் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி
X
நெடுங்குன்றத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில், பிபின்ராவத் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

செங்கபட்டு மாவட்டம், பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றத்தில் உள்ள, அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில், முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கல்லூரி குழும தலைவர் டாக்டர் தேவராஜ் மற்றும் கல்லூரி செயலாளர் டாக்டர் தேவ் ஆனந்த் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்க்கு மாணவ, மாணவியர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மெழுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஜெயா, துணை முதல்வர் திருப்பதி, ஆசிரியர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
the future of ai in healthcare