டீசல் விலை உயர்வை அரசு குறைக்க டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்

டீசல் விலை உயர்வை  அரசு  குறைக்க டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்
X

டிப்பர் லாரி உரிமையாளர்கள்  நல சம்மேளனத்தலைவர் ரவிராஜா

தமிழக முதல்வர் டீசல் விலை ரூ.4 உடனடியாக குறைக்க வேண்டும் என டிப்பர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தமிழக முதல்வர் டீசல் விலை ரூ.4 உடனடியாக குறைக்க வேண்டும் என டிப்பர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் ரவிராஜா மேலும் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது டீசல் விலை நூறு ரூபாய் தாண்டி விற்பனையாகி வருவதால் லாரி உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புகுள்ளாகி வருகின்றனர்.

விலையேற்றத்தால் வாடகை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை லாரி உரிமையாளர்கள் தினந்தோறும் சந்திந்து வருகின்றனர். எனவே தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, தமிழக முதல்வர் டீசல் விலை ரூ.4யை குறைக்க முன்வரவேண்டும். பெட்ரோல், டீசல் குறைக்கபடாவிட்டால் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி இன்னும் ஒரிரு தினங்களில் நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கபடும் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture