ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலா ? கொட்டும் மழையில் அதிகாரி ஆய்வு

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலா ? கொட்டும் மழையில் அதிகாரி ஆய்வு
X

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுகிறதா என்பது குறித்து கொட்டும் மழையிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் தனியார் ஆம்னி பேருந்து சேவைகளும் உள்ளது.

இந்த நிலையில் வண்டலூர் கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் தேவநேசரி ஆகியோர் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். வட்டார போக்குவரத்து அலுவலர் தனியார் பஸ்களில் ஏறி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ஆம்னி பேருந்தில் பயணம் செய்யும் பயனிகளிடம் சென்று பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதா, பாதுகாப்பான பயணம் குறித்து கேட்டறிந்தனர்..

மேலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் முறையாக ஆவணங்கள் இல்லாத ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய வாகன சோதனை கொட்டும் மழையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
ஜலதோஷத்துக்குலாமா டாக்டர் கிட்ட போறீங்களா..? இனிமே இத பண்ணுங்க..!