செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த 216 பேரின் உடல்களை அடக்கம் செய்த த.மு.மு.க

செங்கல்பட்டு மாவட்டத்தில்  கொரோனாவால்  உயிரிழந்த 216  பேரின் உடல்களை அடக்கம் செய்த த.மு.மு.க
X
செங்கல்பட்டு மாவட்டத்தில்  கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை த.மு.மு.க.வினர் அடக்கம் செய்தனர்
செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் இதுவரை 216 கொரோனா நோயாளிகளின் உடல்களை த.மு.மு.க.வினர் அடக்கம் செய்து உள்ளனர்

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த குண்டுமேடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்ய யாரும் முன்வராத காராணத்தால், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில், இலவச அவசர ஊர்தி சேவை மூலமாக அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு நேற்று நல்அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் யாகூப், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கே ஜாகீர்உசேன், ஆகியோர் கூறுகையில்:- ''இறந்தவர் எந்த மதம் என்பது எங்களுக்கு முக்கியமில்லை. இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்யவேண்டும் என்பதை ஒரு சேவையாக த.மு.மு.க மற்றும் ம.ம.க ஆகியவை தமிழகம் முழுவதும் செய்துவருகிறது.

குறிப்பாக, செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில், உள்ள தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பல்லாவரம் கண்டோன்மெண்ட், மறைமலைநகர், உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 216 பேரின் உடல்களை அவர்களது முறைப்படி நல்லடக்கம் செய்துள்ளோம். இந்த சேவை தொடரும். தொடர்ந்து உதவிகளை பெற எங்களை அனுகலாம் ''என்றனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!