வண்டலூர் பூங்காவிலிருந்து சிறுத்தை தப்பவில்லை
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து சிறுத்தை ஒன்று தப்பியுள்ளதாக சமூக வளைதளங்களில் பரவுவது முற்றிலும் தவறானது. இதனை யாரும் நம்பவேண்டாம் என பபூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இன்று சில வலைத்தளங்களிலும் மற்றும் சமூக ஊடகங்களிலும் வெளியான இணைய வழி செய்தியில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து சிறுத்தை ஒன்று தப்பித்ததாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏழு சிறுத்தைகள் உள்ளன. இதில் 4 ஆண் சிறுத்தைகளும் 3 பெண் சிறுத்தைகளும் உள்ளன. அனைத்த்து சிறுத்தைகளும் அந்தந்த விலங்குகளின் இருப்பிடத்தில் வனசரகரின் முறையான பராமரிப்பின் கீழ் முழுமையான சி.சி.டி.வி கண்காணிப்பில் பாதுகாப்பாக உள்ளன.
தவறான செய்திகளைப் வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்க ததவறான செய்திகளை அகற்றி, தெளிவுபடுத்தும் செய்திகளை வழங்கி சம்பந்தப்பட்ட செய்தி ஊடகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான தகவல்களை கொடுப்போர்மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வண்டலூர் பூங்கா நிர்வாக இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu