தாம்பரம் மாநகராட்சியை மொத்தமாக கைப்பற்றியது திமுக

தாம்பரம் மாநகராட்சியை மொத்தமாக கைப்பற்றியது திமுக
X

தாம்பரம் மாநகராட்சியை மொத்தமாக கைப்பற்றியது திமுக கூட்டணி.

தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு, முதல் மாநகராட்சி தேர்தலை சந்தித்தது 70 வார்டுகளை கொண்ட மாநகராட்சியை அதிமுகவும், திமுகவும் கைப்பற்ற தீவிரமாக வேலை செய்து வந்தனர். வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே திமுக முன்னிலை வகித்து இறுதியாக 50 இடங்களிலும் கூட்டணிக் கட்சியினர் காங்கிரஸ் 2, மதிமுக 1, சிபிஎம் 1, என 4 இடங்களிலும் மொத்த திமுக கூட்டணி 54 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. சுயேட்சைகள் 7 இடங்களிலும், அதிமுக 9 இடத்திலும் வெற்றி பெற்றது.

அதிமுக, திமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போட்டியிட்ட சிலர் குறிப்பாக 52 வார்டில் போட்டியிட்ட பெரியநாயகம், திமுவில் சீட் கிடைக்காததால் 39, 40வது வார்டுகளில் சுயேட்சையாக போட்டியிட்ட அம்மா, மகன் வெற்றி பெற்றனர். 56 வது வாா்டுக்கு சேகா், 57 வது வாா்டுக்கு கமலா சேகரும் போட்டியிட்டனா். திமுக சார்பில் போட்டியிட்ட கணவன்,மனைவி இருவரும் வெற்றி பெற்றனா்.

அதேபோல் தாம்பரம் 13 வது வாா்டில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ தன்சிங் மனைவி தனம் தனசிங்கும், 22 வது வாா்டில் தனசிங்கின் மகன் ஜெயபிரகாசும் அம்மா,மகனாக அதிமுக வேட்பாளா்களாக போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.47 வது வார்டில் அதிமுகவை சேர்ந்த சாய்கணேஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திமுகவினர் வாக்கு வாதம் செய்து மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு வாக்கு வாதம் செய்து அதிமுகவினரிடம் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர். பின்னர் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அதிலும் அதிமுக வெற்றி பெற்றது.

தாம்பரம் மாநகராட்சி வெற்றி பெற்ற வேட்பாளா்கள் விபரங்கள்:-

1 கலைவானி பிரபு திமுக 3394.

2 நரேஷ் கண்ணா திமுக 2664.

3 வாணிஸ்ரீ திமுக 4883.

4 சித்ரா திமுக 3794.

5 ஜெகன்நாதன் அதிமுக 2028.

6 கல்யானி திமுக 2413.

7 இன்பசேகர் திமுக 2052.

8 ரம்யா திமுக 2708.

9 லதா திமுக 4130

10 மதினா பேகம் திமுக 4456.

11 கருணாநிதி திமுக 3219.

12 சத்யா மதிவாணன் திமுக 2782.

13 ரேணுகா தேவி பரமசிவம் திமுக 2330.

14 மங்கையர் திலகம் திமுக 2581.

15 ராஜேந்திரன் திமுக 3908.

16 நெடுஞ்செழியன் திமுக 3120.

17 பிரபு திமுக 1868.

18 பிரேமலதா திமுக 1650.

19 பிருந்தாதேவி திமுக 1875.

20 முத்துகுமார் திமுக 2587.

21 கலைசெல்வி திமுக 4169.

22 கிருஷ்ணமூர்த்தி சுயேட்சை 2652.

23 கண்ணன் சுயேட்சை 3846.

24 கீதா திமுக 2439.

25 செந்தில்குமார் காங்கிரஸ் 1777.

26 புஷீரா பானு மதிமுக 1958.

27 மகேஸ்வரி திமுக 2038.

28 விஜயலட்சுமி சிபிஎம் 1964.

29 ஷண்முக சுந்தரி திமுக 3040

30 காமராஜ் திமுக 4582.

31 சித்ரா தேவி திமுக 3908.

32 வசந்த குமாரி திமுக 2354.

33 சுரேஷ் திமுக 3269.

34 சுபாஷினி அதிமுக 2787.

35 சங்கீதா சுயேட்சை 1118.

36 சரஸ்வதி திமுக 1484.

37 மஹாலட்சுமி கருணாகரன் திமுக 3317.

38 சரண்யா திமுக 2200.

39 கிரிஜா சுயேச்சை 1879.

40 ஜெயப்ரதீப் சுயேட்சை 2470.

41 கற்பகம் சுரேஷ் திமுக 1766.

42 கல்யானி திமுக 1603.

43 ஜெகன் திமுக 2146.

44 ராஜா திமுக 2384.

45 தாமோதரன் திமுக 1955.

46 ரமணி திமுக 1765.

47 சாய் கணேஷ் அதிமுக 1511

48 சசிகலா திமுக 2551.

49 காமராஜ் திமுக 2759.

50 யாக்கூப் திமுக 3737.

51 லிங்கேஸ்வரி திமுக 3399.

52 பெரியநாயகம் சுயேட்சை 1748.

53 கோபி திமுக 2728.

54 ஸ்டார்பிரபா அதிமுக 1414.

55 புகழேந்தி திமுக 2354.

56 சேகர் திமுக 2418.

57 கமலா சேகர் திமுக 2583.

58 மதுமிதா திமுக 2579.

59 ராஜேஸ்வரி திமுக 3115.

60 கீதா அதிமுக 2878.

61 ஹேமாவதி சுயேட்சை 3436.

62 இந்திரன் திமுக 1855.

63 ஜோதிகுமார் திமுக 3010.

64 ஷகீலா ஜான்சி மேரி காங்கிரஸ் 2520.

65 சங்கர் அதிமுக 3134.

66 வாணி சுரேஷ் அதிமுக 1758.

67 நடராசன் திமுக 2148.

68 ரமாதேவி திமுக 3150.

69 ராஜ் அதிமுக 3001.

70 தேவேந்திரன் அதிமுக 3449.

திமுகவில் மேயர் வேட்பாளராக 32வது வார்டை சேர்ந்த வசந்தகுமாரி தேர்ந்தெடுக்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!