தாம்பரம் மாநகராட்சி முதல் பெண் மேயராக தேர்வானார் பட்டதாரி பெண்
தாம்பரம் மாநகராட்சி முதல் பெண் மேயராக தேர்வானார் பட்டதாரி வசந்தகுமாரி.
தாம்பரம் மாநகராட்சியில், மொத்தமுள்ள 70 வார்டுகளில் திமுக கூட்டணி 54 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும், சுயேட்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டு, முதல் பெண் மேயராக வசந்த குமாரி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேயர் வேட்பாளரான வசந்த குமாரி, 25 வயதே நிரம்பியவர். அவரது குடும்பம் பாரம்பரியமாக திமுகவிலேயே பயணித்து வருகின்றனர். இந்நிலையில் பட்டியலின பெண்ணுக்கு மேயர் பதவி என்பதால், படித்த பட்டதாரியான இவரை மேயராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவருக்கு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் செங்கோல் வழங்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu