தாம்பரம்: புனித தோமையார் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

தாம்பரம்: புனித தோமையார் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
X

புனித தோமையார் மலை வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள்  கூட்டம் நடைபெற்றது.

தாம்பரம்: புனித தோமையார் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த முடிச்சூரில், புனித தோமையார் மலை வடக்கு ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சியில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய பொறுப்பாளர் த.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.

இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தாம்பரம் தொகுதி எப்படி திமுகவின் கோட்டையாக உள்ளதோ? அதேபோல் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கடுமையாக உழைத்து முடிச்சூர் ஊராட்சியை திமுக கோட்டையாக மாற்ற வேண்டுமென நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். அனைவரும் கலைஞர் நினைவு நாளில் முடிச்சூர் ஊராட்சியை திமுக கோட்டையாக மாற்றிக் காட்டுவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business