தாம்பரத்தில் பயங்கரம்: நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபா் கொலை; 6 போ் கும்பல் வெறிச்செயல்
நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட பகுதியும், கொலை செய்யப்பட்ட வாலிபரையும் காணலாம்.
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் அண்ணா தெருவை சோ்ந்தவர் சரத் (26). இவர் நேற்று இரவு தனது வீட்டு வாசலில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவா்களைபாா்த்ததும் சரத் பயந்து ஓடத்தொடங்கினாா்.
ஆனால் அந்த கும்பல் சரத்தை ஓட ஓட விரட்டியது. அதோடு அவா்கள் வைத்திருந்த பையிலிருந்து நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து சரத் மீது வீசினா். இவ்வாறு தொடர்ந்து அவர்கள் 3 குண்டுகளை வீசினா். அதில் ஒரு குண்டு சரத் தலையில்பட்டு வெடித்தது. இதில் அவரது தலை சிதறி கிழே சாய்ந்தாா். ஆனாலும் அந்த கும்பல் விடவில்லை. தலை சிதறி துடித்துக்கொண்டிருந்த உடலை சரமாறியாக வெட்டினா்.
இதற்கிடையே குண்டு வெடிப்பு சத்தமும், அலறல் சத்தமும் கேட்டு அக்கம்பக்கத்தினா் திரண்டு வந்தனா். உடனே அந்த கும்பல் திரண்டு வந்த கூட்டத்தை கத்திகளை காட்டி மிரட்டி விட்டு, 3 மோட்டாா் சைக்கிள்களில் ஏறி தப்பி ஓடினா்.
இதையடுத்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனா். பெரும்பாக்கம் போலீசாா் விரைந்து வந்து, உயிரிழந்து கிடந்த சரத் உடலை எடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் போலீசாா் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தேடிவருகின்றனா்.
சரத்தை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்து விட்டு தப்பிய மர்ம கும்பலை சோ்ந்தவா்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதே பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பும் இதைப்போல் ஒருகும்பல், இரவில் பெட்ரோல் குண்டு வீசி ஒருவரை கொலை செய்தது. அதைப்போல் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
எனவே இப்பகுதியில் வெடிகுண்டுகள் வீசப்படுவது தொடா்ந்து நடந்துவருகிறது. அங்கு மேலும் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க போலீசாா் குவிக்கப்பட்டுள்ளனா். இதில் சந்தேகத்திற்கிடமான சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu