காற்றில் பறக்கும் விதிமுறை: பிரபல நகைக்கடைக்கு அபராதம்

காற்றில் பறக்கும் விதிமுறை: பிரபல நகைக்கடைக்கு   அபராதம்
X
கொரொனா விதிமுறைகளை கடைபிடிக்காத பிரபல நகைக்கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சானடோரியம், ஜிஎஸ்டி சாலையில், பிரபலமான ஜிஆா்டி தங்க நகைக்கடை உள்ளது. இக்கடை, அரசின் கொரோனா கட்டுப்பாடுகளால் தற்போது மூடப்பட்டுள்ளது. எனினும், கடையின் முன்பாக, கடையில் பணியாற்றும் ஊழியா்கள் அதிகளவு சமுக இடைவெளியின்றி கூடியிருந்தனர்.

இதை பார்த்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் சங்கர்,அந்த கடை நிா்வாகத்திற்கு ரூ.5,000 அபராதம் விதித்தாா்.அத்துடன், தொகைக்கான ரசீது ஜி.ஆர்.டி நகைக்கடை நிர்வாகத்தினரிடம் வழங்கினார். தொடர்ந்து அரசின் விதிகள், நடமுறைகளை கடைபிடிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!