தாம்பரம் மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் ஒரு மண்டலத்தில் சுயேச்சை வெற்றி

தாம்பரம் மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் ஒரு மண்டலத்தில் சுயேச்சை வெற்றி
X

மண்டல குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதீப் சந்திரன் மற்றறொரு கவுன்சிலரான  தனது தாயாருடன் உள்ளார்.

தாம்பரம் மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் ஒரு மண்டலத்தில் சுயேச்சை மாமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளார்.

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் தாம்பரம் மாநகராட்சி ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலகுழுத் தலைவர் தேர்தல் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

1வது மண்டலமான பம்மல் மண்டலத்திற்கு தலைமைக் கழகத்தின் சார்பில் மண்டலக் குழு தலைவராக வே.கருணாநிதி அறிவிக்கப்பட்டு அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் போட்டியின்றி தேர்வானார்.

2வது மண்டலமான பல்லாவரம் மண்டலத்திற்கு வேட்பாளராக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் சகோதரர் ஜோசப் அண்ணாதுரை அறிவிக்கப்பட்டு இருந்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஜோசப் அண்ணாதுரை போட்டியின்றி தேர்வானார்.

3வது மண்டலமான செம்பரம்பாக்கம் மண்டலத்திற்கு தி.மு.க. சார்பில் மகாலட்சுமி கருணாகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். அவரை எதிர்த்து 40 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதீப் சந்திரன் போட்டியிட்டார். மொத்தம் உள்ள 14 வாக்குகளில் இருவருக்கும் சமமாக 7க்கு 7 வாக்குகள் கிடைத்த நிலையில் குலுக்கல் முறை கையாளப்பட்டது. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரதீப் சந்திரன் அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார் இவர் 40 வது வார்டிலும் இவரது தாயார் 39வது வார்டிலும் சுயேச்சையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

4வது மண்டலத்திற்கு தி.மு.க. சார்பில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜாவின் மைத்துனர் காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் காமராஜ் போட்டியின்றி தேர்வானார்.

5வது மண்டலம் மாடம்பாக்கம் பகுதிக்கு தி.மு.க. சார்பில் இந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இருந்த நிலையில் அவரையும் யாரும் எதிர்த்து போட்டியிடாததால் போட்டியின்றி 5வது மண்டலகுழு தலைவராக இந்திரன் வெற்றி பெற்றார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!