தாம்பரம் மாநகராட்சி 2 வார்டு தேமுதிக வேட்பாளர் மரக்கன்று நட்டு பிரசாரம்

தாம்பரம் மாநகராட்சி 2 வார்டு  தேமுதிக வேட்பாளர் மரக்கன்று நட்டு  பிரசாரம்
X

தாம்பரம் மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்  அனகாபுத்தூர் நகர செயலாளரும், தேமுதிக வேட்பாளர் மகாதேவன் 

சுற்று சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்றுகளை நட்டு வாக்கு சேகரித்த தாம்பரம் மாநகராட்சி 2 வார்டு தேமுதிக வேட்பாளர்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அனகாபுத்தூர் நகர செயலாளரும், தேமுதிக வேட்பாளருமான மகாதேவன் மாநகராட்சி 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டுகிறார்.

இந்தநிலையில் தேமுதிக வேட்பாளர் மகாதேவன் தேர்தலில் வெற்றிபெற முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு அனகாபுத்தூர் 2வது வார்டிற்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகரில் வீடு, வீடாக சென்று முரசு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களை கேட்டுகொண்டார். சுற்று சூழல் பாதுகாப்பு முதன்மையாக இந்த பகுதியை மாற்றுவேன் என்ற அடிப்படையில் பரப்பரைக்கு முன்னர் மரக்கன்றுகளை தேமுதிக வேட்பாளர் மகாதேவன் நட்டி வைத்தார். அதேபோல் இந்த பகுதி கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு சமூக பணியை செய்து இருப்பதாகவும், வெற்றி பெற்றால் அந்த பணி மேலும் சிறப்பாக செய்வேன் என வாக்குறுதி அளித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்