தாம்பரம் மாநகராட்சியில் 7 பறக்கும் படைகள் அமைப்பு: ஆணையர் தகவல்

தாம்பரம் மாநகராட்சியில் 7 பறக்கும் படைகள் அமைப்பு: ஆணையர் தகவல்
X
தாம்பரம் மாநகராட்சியில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, ஆணையர் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 70 வார்டுகளில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த அறிவிப்பால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறுகையில், தேர்தலை முன்னிட்டு, 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் வாகனச்சோதனையில் ஈடுபட்டு தேர்தல் விதிமுறைகளை மீறி, உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்வர். அதனை வீடியோவாகவும் பதிவு செய்து கண்காணிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

வணிகர்கள் உரிய ஆவணத்தோடு பணத்தை கொண்டு சென்றால் அனுமதிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். தாம்பரம் மாநகராட்சி, முதல்முறையாக நகர்ப்புற தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story