தாம்பரம் மாா்க்கெட் திடீர் மூடல்; ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தவிப்பு

தாம்பரம் மாா்க்கெட் திடீர் மூடல்; ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தவிப்பு
X

தாம்பரம் மார்க்கெட் மூடப்பட்டதால் நடைபாதை கடைகளில் கூடிய மக்கள்.

தாம்பரம் மாா்க்கெட் முன்னறிவிப்புமின்றி இன்று திடீரென மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக குறைந்த நிலையில், அரசு ஊரடங்கில் பல தளா்வுகளை அறிவித்து, பொதுபோக்குவரத்து, கடைகள், மாா்க்கெட்களை திறக்க அனுமதித்திருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது கொரோனா வைரஸ் 3 ஆம் அலை தொடக்கமாக இருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதுகாப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், புதிய தளா்வுகள் எதுவுமின்றி, ஏற்கனவே உள்ள தளா்வுகளுடன் ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு மாநிலம் முழுவதும் நீடிக்கப்படுகிறது.

பொதுமக்கள் அதிகஅளவில் கூடும் பகுதிகள் மூடப்படும் என்றும் எச்சரித்திருந்து. இதையடுத்து சென்னை மாநகராட்சி சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் 9 இடங்களில் வணிக வளாகங்கள், மாா்க்கெட்கள், கடைகள் இன்றிலிருந்து 9 ஆம் தேதி வரை திறக்க தடை விதித்து அறிவித்தது.

சென்னை புறநகா் பகுதியான தாம்பரம் சண்முகம் சாலை, மாா்க்கெட் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தாம்பரத்தை சுற்றியுள்ள 100 க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த சிறுவியாயாரிகள், பொதுமக்கள் பொருட்கள் வாங்க பல ஆயிரக்கணக்காணோா் இங்கு கூடுவாா்கள். ஆனால் தாம்பரம் மாா்க்கெட் பற்றி செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் நேற்று நள்ளிரவு வரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதையடுத்து, இன்று காலை வழக்கம்போல் தாம்பரம் மாா்க்கெட் வியாபாரிகள் கடைகளை திறக்க வந்தனா். ஆனால் நகராட்சி ஊழியா்களும், போலீசாரும் பெருமளவு குவிந்திருந்து வியாரிகள் கடைகளை திறக்கக்ககூடாது என்று தடுத்தனா். அதோடு சண்முகம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து வாகனங்கள், பொதுமக்கள் வர முடியாமல் தடையும் செய்தனா்.

நாளை ஞாயிறு என்பதால் வழக்கமாக சனிக்கிழமை மாா்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதோடு இந்துக்களின் முக்கிய திருவிழாவான ஆடி மாதம் 3 வாரம் என்பதால், அந்த பண்டிகைக்கான பொருட்களை வாங்க பொதுமக்களும் பெருமளவு காலையிலே மாா்க்கெட்டிற்கு வந்தனா். அவா்களிடம் போலீசாா் உடனே இங்கிருந்து கலைந்து செல்லுங்கள். உங்கள் வீடுகள் அருகே உள்ள சிறிய கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்று திருப்பி அனுப்பினா்.

இதற்கிடையே வியாரிகள் அனைவரும் ஒன்று திரண்டு போலீஸ்,நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுப்பட்டனா். சென்னை மாநகராட்சி நேற்று இரவே அறிவித்துவிட்டனா். ஆனால் நீங்கள் எந்த அறிப்பும் செய்யாமல் இப்போது திடீரென தடை விதிப்பது ஏன்? என்று கேட்டனா்.

அதற்கு நகராட்சி அதிகாரிகள், எங்களுக்கு மாவட்ட நிா்வாகத்திடமிருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் தான் அறிவிப்பு வந்தது. எனவே தான் உங்களுக்கு முன்னதாகவே அறிவிக்க முடியவில்லை என்றனா். அப்பபெடியெனில், இன்று ஒரு நாள் மட்டும் கடைகளை திறக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்டனா். ஆனால் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதங்கள் செய்தனா். போலீசாா் அவா்களை விரட்டி கலைத்தனா்.

இந்நிலையில், காய்கறி, கீரை,பழங்கள்,பூக்கள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சிறு வியாபாரிகள் தாம்பரம் மாா்க்கெட் பகுதிக்கு அருகே உள்ள சிவசண்முகம் சாலை, காந்தி சாலை, ராஜாஜி சாலை போன்ற பகுதிகளில் நடைபாதைகடைகளை அமைத்து வியாபாரம் செய்ய தொடங்கினா். பொதுமக்களும் அங்கு சென்று பொருட்களை வாங்கினா். இதனால் அந்த பகுதிகளும் மினி மாா்க்கெட்கள் போல் கூட்டம்கூடி காட்சியளித்தது.

அதே நேரத்தில் தாம்பரம் மாா்க்கெட் பகுதியில் உள்ள பெரிய கடைகள், ஓட்டல்கள்,மீன்,கறி மாா்க்கெட்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானாா்கள்.

சென்னை மாநகராட்சி போன்று, செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகமும் அதே நேரத்தில் இரவு 8 மணிக்குள் அறிவித்திருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது என்று சமூக ஆா்வலா்கள் தரப்பில் கூறுகின்றனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!