குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த கழிவுநீா் கலந்த மழைநீரை வெளியேற்ற கோரி போராட்டம்

குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த கழிவுநீா் கலந்த மழைநீரை வெளியேற்ற கோரி போராட்டம்
X
குடியிருப்புகளை சுற்றி சூழ்ந்துள்ள மழை நீர் கலந்த கழிவு நீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த கழிவுநீா் கலந்த மழைநீரை வெளியேற்ற கோரி சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஆங்காங்கே கழிவுநீா் கலந்த மழை நீர் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் சென்னை மேற்கு தாம்பரம் பகுதிகளான கிருஷ்ணா நகர், பாரதிநகர், சசிவரதன்நகர், திடீா் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீா் கலந்த மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதுபற்றி குடியிருப்பு வாசிகள் தாம்பரம் மாநகராட்சிக்கு பலமுறை புகாா்கள் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.குடியிருப்புகளை கடந்த 4 நாட்களாக மழைநீா் சூழந்திருந்தது. அதிகாரிகள் யாரும் அப்பகுதிக்கு வந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்பு வாசிகள் இன்று தாம்பரம்-முடிச்சூர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டபட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளும்,தாம்பரம் போலீசாரும் வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.அப்போது பொதுமக்கள்,எங்கள் பகுதியில் சூழந்துள்ள மழைநீரின் பெரும்பகுதி,முடிச்சூா் வரதராஜபுரம் பகுதி தண்ணீா்.அங்கு வெளியேற்றும் தண்ணீா் எங்கள் பகுதிக்கு வந்து விடுகிறது.எனவே அதை தடுக்க வேண்டும் என்றனா்.

அதிகாரிகள் இன்று மாலைக்குள் மழைநீா் அகற்றப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு,கலைந்தனா்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil