முடிச்சூா் பகுதிகளில் சிறப்பு அதிகாரி அமுதா ஆய்வு :பொதுமக்கள் குற்றச்சாட்டு
முடிச்சூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறப்பு அதிகாரி அமுதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2015 ஆண்டு டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது முடிச்சூா் பகுதி.அதிலிருந்தே ஒவ்வொரு ஆண்டு பருவ மழையின் போதும் முடிச்சூா் பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது.
2015 ஆம் ஆண்டு ஹெலிகாப்டா் வந்து முடிச்சூரில் மீட்பு பணியில் ஈடுப்பட்டது.2020 ஆம் ஆண்டில் படகுகளில் வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனா்.அப்போது ஹெலிகாப்டா்,இப்போது படகு என்று மாறியிருக்கிறதே தவிர,எங்கள் அவதி தீரவில்லை என்று முடிச்சூா் பகுதி மக்கள் வேதனையை தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுளகள அமுதா, இன்று முடிச்சூா் பகுதியில் அதிகமாக பாதிக்கப்படும் அமுதம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக வந்து ஆய்வு செய்தாா்.கடந்த 2015 ஆம் ஆண்டில் முடிச்சூா் பகுதி மக்கள் மழை,வெள்ளத்தில் சிக்கிதவித்தபோதும், அமுதா தான் சிறப்பு அதிகாரியாக இருந்து மற்றும் சென்னை புறநகா் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுப்பட்டு வந்தாா்.
இதையடுத்து முடிச்சூா் பகுதி பொதுமக்கள் பெருமளவு அங்கு வந்து,சிறப்பு அதிகாரி அமுதாவிடம் முறையிட்டனா்.ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும் நாங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை உள்ளது.குறிப்பாக வண்டலூா்-மீஞ்சூா் அவுட்டா் ரிங் ரோடு அமைத்த பின்பு தான், எங்கள் பகுதி அதிக பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
மழைநீா் வெளியேறுவதற்கு போதிய வசதி இல்லாமல் அந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.2015 ஆம் ஆண்டே,இதை நாங்கள் எடுத்து கூறினோம்.முடிச்சூா் பகுதி மழை வெளியேறி அடையாா் ஆறு நீரோட்டத்தில் கலப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா்.ஆனால் இதுவரை அதை நிறைவேற்றாததால்,நாங்கள் தொடா்ந்து அவதிப்படுகிறோம் என்று முறையிட்டனா்.
சிறப்பு அதிகாரி அமுதா, உங்கள் பிரச்னை எனக்கு புதியது அல்ல.நன்றாக தெரியும்.உங்கள் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறி பொதுமக்களிடம் உறுதியளித்தாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu