பொதுமக்களுக்கு இலவசமாக விநாயகர் சிலைகளை வழங்கிய சிவசேனா கட்சியினர்

பொதுமக்களுக்கு இலவசமாக விநாயகர் சிலைகளை வழங்கிய சிவசேனா கட்சியினர்
X

பொதுமக்களுக்கு விநாயகர் சிலை வழங்கிய இந்து முன்னணியினர்.

தாம்பரம் மார்க்கெட் சாலையில் சிவசேனா கட்சி சார்பில் பொதுமக்களுக்கு களிமண்ணில்லான விநாயகர் சிலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தாம்பரம் மார்க்கெட் பகுதியான சண்முகம் சாலையில் சிவசேனா கட்சி சார்பில் பொதுமக்களுக்கு களிமண்ணில்லான விநாயகர் சிலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவசேனா கட்சி மாநில தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், இந்து ஒற்றுமை மேம்படவும் இந்துக்கள் புகழ் மேல் ஓங்கவும், வருடாவருடம் சிவசேனா கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் இருபதாவது ஆண்டு விழா நடைபெற இருக்கின்ற நேரத்தில் அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, நாங்கள் சிவசேனா கட்சி சார்பில் தாம்பரம் செல்வ விநாயகர் திருக்கோவில் வாசலில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்கிறோம். தற்போது அரசு அறிவித்த கட்டுப்பாட்டுடன் தற்போது தங்களுடைய கலாச்சார பண்பாடு சம்பிரதாயம் முறைப்படி விநாயகர் சிலையை வைத்து வழிப்பாட்டு கொண்டிருக்கின்றோம் என்று அவர் கூறினார். இந்நிகழ்வில் சிவசேனா கட்சி முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!