பெருங்களத்தூரில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை
மின்சாரம் தாக்கி சிறுமி பலி
தாம்பரம் அருகே பெருங்களத்தூா் சதானந்தபுரத்தில் கணக்கு தேர்வு சரியாக எழுதவில்லை என்று பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.2 தினங்களில் அடுத்தடுத்து 2 மாணவா்கள் கணக்கு பாடம் கடினம் என்று பெருங்களத்தூரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சதானந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆம்புரூஸ் மார்டின் சுய தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் மேத்யூவ் ஆம்புரூஸ் (14).இவா் நெடுங்குன்றம் ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவன் தான் கணக்கு தேர்வினை சரியான முறையில் எழுதவில்லை என்று பெற்றோரிடம் கூறி கவலைப்பட்டாா். இதற்கு பெற்றோர் கவலைபட வேண்டாம் என்று மேத்யூவை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதன்பின்பு மேல் மாடியில் உள்ள தனது அறையில் தேர்வுகாக படிக்க செல்வதாக கூறி சென்றாா்.ஆனால் இரவு வெகுநேரமாகியும் மேத்யூ கீழே வரவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டியும் திறக்கவில்லை.செல்போனில் தொடா்பு கொண்டால்,போனை எடுக்கவில்லை.இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்த போது மேத்யூ பேன் கொக்கியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாா்.இதைக்கண்டு பெற்றோா் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பீர்கன்காரணை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu