பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ,2,90,500 நூதன முறையில் கொள்ளை : போலீசார் விசாரணை

பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ,2,90,500 நூதன முறையில் கொள்ளை : போலீசார் விசாரணை
X

கொள்ளையடிக்கப்பட்ட பல்லாவரம் ஏடிஎம்.

பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ,2,90,500 நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பழைய டிரங்க் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்மில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 2 லட்சத்து 90 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மாயமாகியுள்ளது.

சென்னை முழுவதும் பல்வேறு ஏடிஎம்மில் இருந்து பணம் கொள்ளை போனதையடுத்து வங்கி நிர்வாகம் தரப்பில் ஏடிஎம்மில் உள்ள பணத்தை சரிப்பார்க்குமாறு அறிவுறுத்தினர்.

அதனையடுத்து இன்று வங்கி மேலாளர் பாலாஜி சரிபார்த்த போதுதான் ஏடிஎம்மில் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து வங்கி மேலாளர் பாலாஜி பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!