தாம்பரம் சானிடோரியம் நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும்பணி

தாம்பரம் சானிடோரியம் நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும்பணி
X

உலக காடுகள் தினத்தையொட்டி தாம்பரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

தாம்பரம் சானிடோரியம் நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும்பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.

தாம்பரம் சானிடோரியம் நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் பசுமை திட்டம் 2022- கீழ் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மாணவிகள் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி மற்றும் நெடுங்குன்றம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு பசுமை திட்டம் 2022 யின் படி கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்று வருகின்றது. குறிப்பாக சென்னை மீனம்பாக்கம், நெடுங்குன்றம், பொத்தெரி, முகலிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்று நட்டனர்.

அதன் ஒரு பகுதியாக அன்னை வேளாங்கண்ணி கல்லூரி குழும நாட்டு நலத்திட்ட பணி மாணவ, மாணவிகள் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அன்னை வேளாங்கண்ணி கல்வி குழும செயலாளர் தேவ் ஆனந்த் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டனர்.

இது குறித்து கல்லூரி செயலாளர் தேவ் ஆனந்த் கூறுகையில், தங்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். கடந்த ஒரு வாரத்தில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்று நட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தாண்டுக்குள் 2022 மரக்கன்றுகள் நடப்படும். மரக்கன்று நடுவவோடு மட்டுமில்லாமல் அதனை தொடர்ந்து பாரமரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கல்லூரி டீன் சரவணன், முதல்வர் ஆட்லின் தேவ் சுஜின், துணை முதல்வர் மல்லிகா, கீதாலட்சுமி, பொறியியல் கல்லூரி துணை முதல்வர் திருப்பதி, மற்றும் அன்னை வேளாங்கண்ணி நாட்டு நலத்திட்டபணி மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!