பாலியல் தொழில் செய்த இருவரை சேலையூர் போலீசார் கைது செய்தனர்: ஒரு பெண் மீட்பு
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், அன்னை நகரில் உள்ள, ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக, சேலையூர் உதவி ஆணையர், முருகேசனுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, உதவி ஆணையர் தலைமையிலான, தனிப்படை போலீசார், வீட்டில் ஆய்வு செய்ததில், அங்கு, 35 வயதுடைய இளம்பெண்ணை வைத்து, இரண்டு வாலிபர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் இளம்பெண் ஒருவரையும் மீட்டனர்.
விசாரணையில், மாடம்பாக்கம், மருது நகர், 6வது தெருவைச் சேர்ந்த, பாஸ்கர்(31), மற்றும் சுதர்சன் நகர் பிரதான சாலையைச் சேர்ந்த, சுதன்(30), எனவும், ஒரு வாரமாக இளம்பெண்ணை வைத்து, பாலியல் தொழில் செய்து வந்ததாக தெரிவித்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். மீட்கப்பட்ட பெண்ணை மயிலாப்பூரில் உள்ள, பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu