மடிப்பாக்கம்: ரெம்டெசிவிர்மருந்து தருவதாக ரூ.1.23லட்சம் ஆன்லைன் மோசடி!

மடிப்பாக்கம்: ரெம்டெசிவிர்மருந்து தருவதாக ரூ.1.23லட்சம் ஆன்லைன் மோசடி!
X

கோப்பு காட்சி.

மடிப்பாக்கத்தில் ரெம்டெசிவிா் மருந்து தருவதாக கூறி ஆன்லைனில் ரூ.1.23 லட்சம் ஆன்லைன் மோசடி நடந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மடிப்பாக்கம் ராம்நகரை சோ்ந்தவா் S.ஶ்ரீகணேஷ் (36).இவருடைய குடும்பத்தை சோ்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாசிடீவ் ஆனது.அவா்கள் வீட்டிலேயே தனிப்படுத்தி சிகிச்சை பெற்றுவந்தனா்.

அவா்களுக்கு சிகிச்சையளித்த தனியாா் மருத்துவமனை டாக்டா், ரெம்டெசிவிா் மருந்து வாங்கி வரும்படி ஶ்ரீகணேஷ்சிடம் வற்புறுத்தினாா். இதையடுத்து ஶ்ரீகணேஷ் சமூக வலைதளத்தில் ஆய்வு செய்தாா்.அப்போது R.K.Pharmaceutical/Indore என்ற நிறுவனத்தில் அந்த மருந்து ஸ்டாக் இருப்பதாக தெரிந்தது.

இதையடுத்து ஶ்ரீகணேஷ் அந்த நிறுவனத்தை தொடா்பு கொண்டாா். அவா்கள் பணம் ரூ.1.23 லட்சம் ஆன்லைனில் அனுப்பும்படி கூறினா்.

ஶ்ரீகணேஷ் கடந்த 13 ஆம் தேதி ஜெகே.அசோசியேட் என்ற நிறுவனத்தின் பேடிஎம் வங்கி கணக்கில் பணம் செலுத்தினாா்.ஆனால் இதுவரை மருந்து வரவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தை தொடா்பு கொண்டால் எந்த தகவலும் இல்லை.

இதனால் ஶ்ரீகணேஷ் மடிப்பாக்கம் போலீசில் புகாா் செய்தாா்.போலீசாா் வழக்குப்பதிவு செய்தனா்.அதோடு இது ஆன்லைன் பணமோசடி என்பதால் சென்னை மாநகர சைபா் கிரைம் பிராஞ்ச் போலீசாருக்கு அனுப்பி வைத்தனா். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!