ஊரப்பக்கம் அருகே ரவுடிகள் மாமூல் கேட்டு அராஜகம்: வணிகர்கள் சாலைமறியல்

ஊரப்பக்கம் அருகே ரவுடிகள் மாமூல் கேட்டு அராஜகம்: வணிகர்கள் சாலைமறியல்
X

ஊரப்பாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட வணிகர்கள்.

ஊரப்பக்கம் அருகே ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுபடுத்த வலியுறுத்தி வணிகர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் இன்று காலை ரவுடி கும்பல் ஒன்று வணிகர்களிடம் மாமூல் கேட்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வணிகர்கள் மாமூல் கொடுக்க முடியாது என கூறியதும், அந்த ரவுடி கும்பல் கடைகளை சூரையாடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வணிகர்கள் ரவுடிகளை கைது செய்ய வலியுறுத்தி சென்னை செல்லும் முக்கிய சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரானமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் ரவுடிகளை கைது செய்வதாக உறுதியளித்ததின் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!