தாம்பரம் அருகே நூதன முறையில் கொள்ளை: இளம் பெண், வாலிபரை போலீஸ் தேடுது

தாம்பரம் அருகே நூதன முறையில் கொள்ளை: இளம் பெண், வாலிபரை போலீஸ் தேடுது
X

பைல் படம்

தாம்பரம் அருகே நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் பெண் மற்றும் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த அகரம் தென் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுகுனா இவர்களுடைய மகள் புஷ்பலதா (19). வழக்கம் போல் ரவி, ராயபுரத்தில் வேலைக்காக சென்ற நிலையில் தாய் சுகுனாவும் பள்ளிகரனையில் துணி வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அப்போது தனியாக இருந்த புஷ்பலதாவின் வீட்டிற்க்கு வந்த இளைஞர் மற்றும் இளம் பெண் ஒருவர் தாங்கள் தூரத்து உறவினர்கள் என்றும் கல்யாண பத்திரிக்கை வைக்க வந்துருப்பதாகவும் கூறியுள்ளனர்.

குடிப்பதற்க்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்ட இருவரும் திடிரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து மிரட்டி புஷ்பலதாவிடம் பீரோ சாவியினை பறித்துக் கொண்டனர். பின்பு அவரின் கை மற்றும் கால்களை கட்டிவிட்டு சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்துள்ளனர்.

பின்னர் பீரோவில் வைக்கபட்டிருந்த ஏழு சவரன் தங்க நகை ,ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்து சென்ற மர்ம நபர்கள் கட்டினனயும் அவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பலதா விட்டிற்க்கு திரும்பிய தாயிடம் இது குறித்து கூறியதை அடுத்து சேலையூர் போலிசாரிடம் புகார் அளிக்கபட்டது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலிசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்