தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பல் கைது : 12 சவரன் தங்க நகை பறிமுதல்

தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பல் கைது : 12 சவரன் தங்க நகை பறிமுதல்
X

பைல் படம்.

பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை காவல் நிலைய, எல்லை பகுதியில், பழைய பெருங்களத்துார், முடிச்சூர், வெங்கம்பாக்கம், மேற்கு தாம்பரம், கிஷ்கிந்தா சாலை என, நான்கிற்கும் மேற்பட்ட இடங்களில், கடந்த, 10 நாட்களில், ஐந்து இடங்களில் திருட்டு, சம்பவங்கள் நடந்தன.
தொடர்ச்சியாக நடந்த, இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க, பீர்க்கன்காரணை போலீசார், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், விசாரித்து வந்த நிலையில், பம்மல் அடுத்த அனகாபுத்துாரில் உள்ள, ஒரு அடகு கடையில், திருடிய நகைகளை அடகு வைக்க முயன்றபோது, குன்றத்துார், தண்டலம், இரண்டாம் கட்டளையைச் சேர்ந்த, சதீஷ்(19), பஷீர் அகமது(20), ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த, மணிகண்டன் (20), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில், பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லையில், கடந்த, 10 நாட்களில் நடந்த, ஐந்து திருட்டு சம்பவங்களிலும், இவர்கள் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
அவர்களை, கைது செய்த போலீசார், 12 சவரன் தங்க நகைகள், இரண்டு மடிக்கணினி, இரண்டு ‛யமஹா' இருசக்கர வாகனங்கள், ஒரு ‛கே.டி.எம்.,' இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!