ஒரே நேரத்தில் 10 கடைகளில் கொள்ளை; தாம்பரத்தில் அதிர்ச்சி சம்பவம்

ஒரே நேரத்தில் 10 கடைகளில் கொள்ளை; தாம்பரத்தில் அதிர்ச்சி சம்பவம்
X

நள்ளிரவில் கொள்ளை நடந்த கடைகள்.

தாம்பரம் இரும்புலியூரில் அடுத்தடுத்து 10 கடைகளில் கொள்ளை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் இரும்புலியூரில் அடுத்தடுத்து 10 கடைகளில் கொள்ளை . 20 ஆயிரம் பணம் 8 கைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளையடித்த கும்பல் அக்கம்பக்கத்தினரை கண்டதும் தப்பியது.

தாம்பரம் இரும்புலியூரில் இறைச்சி கடை, மளிகை கடை ,செல்போன் கடை, உணவகம் உள்ளிட்ட 10 கடைகளில் நள்ளிரவு அடுத்தடுத்து ஒரே நேரத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடியுள்ளனர். கடைகளில் இருந்த 20 ஆயிரம் பணம், 8 கைபேசிகள், மின் சாதன பொருட்கள், எடை போடும் கருவி போன்றவற்றை கொள்ளையடித்தனர்.

அப்போது மற்றொரு கடையின் பூட்டை உடைக்கும் போது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குரல் கொடுத்ததும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனையடுத்து, கொள்ளை சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர்கள் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!